திருவாரூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:30 PM GMT (Updated: 5 Sep 2018 7:01 PM GMT)

ஆயுள் காப்பீடு பிரிமியத்தின் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

ஆயுள் காப்பீடு பிரிமியத்தின் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். முகவர் கமிஷனை உயர்த்திட வேண்டும். காலாவதியான புதிய பாலிசிகளை புதுப்பிக்க 5 ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும். நஷ்டத்தை உண்டாக்கும் வங்கிகளில் முதலீடு செய்ய கூடாது. முகவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர்் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி முகவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க கிளை தலைவர் முத்து தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. ஊழியர் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் மதியழகன், துணைத்தலைவர் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் விசுவநாதன், நிர்வாகிகள் கோவிந்தராஜன், முருகேசன், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story