வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2018 4:15 AM IST (Updated: 6 Sept 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளித்தலை,

வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். ஊதியக்குழு குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Next Story