ரூ.15¼ லட்சம் போதைப்பொருளுடன் 3 நைஜீரியர்கள் சிக்கினர்
மும்பை மால்வாணி பகுதியில் சிலர் போதைப்பொருள் விற்பனை செய்ய வருவதாக மால்வாணி போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது
மும்பை,
போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு வெளிநாட்டு வாலிபர்கள் 3 பேர் சந்தேகத்திற்கிடமாக வந்தனர்.
போலீசார் 3 பேரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த பைகளை வாங்கி சோதனை போட்டனர். இந்த சோதனையின் போது, ஒரு பையில் ‘கோகைன்’ என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 152 கிராம் எடை கொண்டதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் நைஜீரிய நாட்டை சேர்ந்த சுக்வு பிலிப்ஸ் காட்வின் (வயது32), சுக்வே மெக்கா டேனியல் (24), மைக்கேல் ஒக்பன்னா கவுசி (22) என்பது தெரியவந்தது.
போலீசார் கைதான 3 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story