இருவேறு சம்பவங்களில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்


இருவேறு சம்பவங்களில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:05 PM GMT (Updated: 7 Sep 2018 11:05 PM GMT)

மும்பையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரெயிலில் கடத்தி செல்வதற்காக டாக்சியில் ரெயில் நிலையத்துக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக டோங்கிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மும்பை,

பி.டி. மெல்லோ ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு டாக்சியில் 233 கிராம் எடையுள்ள எம்.டி. போதைப்பொருள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தி வந்த டிரைவர் ஆசிப் முகமது யூனுஸ் அன்சாரி என்பவரை கைது செய்தனர். இவர் சிவ்ரியில் இருந்து சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்திற்கு அந்த போதைப்பொருளை கடத்தி சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவத்தில் பைகுல்லா தீயணைப்பு நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக ஆசாமி ஒருவர் நடமாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குறிப்பிட்ட ஆசாமியை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, அவர் ரூ.5 லட்சம் மதிப்புள்ள எம்.டி. போதைப்பொருள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவரது பெயர் காசிம் முகமது சித்திக் (வயது35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story