தி.மு.க.–காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் பூவலிங்கம், தி.முக. பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் ஷாஜகான் வரவேற்று பேசினார்.
இதில் தூவல் அழகர், பெருங்கருணை சுந்தர்ராஜ், மணலூர் சப்பானி, உதயகுமார், மதியழகன், காங்கிரஸ் நகர் தலைவர் சுரேஷ்காந்தி, கிழக்கு வட்டார தலைவர் ராமர், மேற்கு வட்டார தலைவர் புவனேசுவரன், முன்னாள் நகர் துணை தலைவர் பாசில் அமீன், த.மு.மு.க. வாவா ராவுத்தர், பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க. நகர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து தேரிருவேலி விலக்கு சாலையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.