ரவுடி தம்பி கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடி தம்பி கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகை அருகே நெடுங்குன்றத்தை சேர்ந்த குட்டி மகன் உதயா (எ) உதயராஜ் (வயது 28). இவர் பிரபல ரவுடி சூரியாவின் தம்பி ஆவார். கடந்த ஜூலை மாதம் 25–ந் தேதி காலை உதயாவும், சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷும், வண்டலூர்–கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கத்தில் இருந்து கண்டிகை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் உதயராஜை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொன்றது. இதுதொடர்பாக தாழப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் (ஆகஸ்டு) 1–ந் தேதி, ஓட்டேரியை சேர்ந்த நரேஷ்குமார் (26), கிளாம்பாக்கத்தை சேர்ந்த கனகராஜ் (26) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.