பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசர் விலை உயர்வை கண்டித்து கும்பகோணத்தில் மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்றனர்.
கும்பகோணம்,
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில வர்த்தக அணி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப்ராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராசுதீன், கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக், மாவட்ட செயலாளர் மரூப், மாவட்ட பொருளாளர் இக்பால்சேட் மற்றும் மாவட்ட துணை அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், குவைத் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story