ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து 28-ந் தேதி மருந்து கடை அடைப்பு போராட்டம்


ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து 28-ந் தேதி மருந்து கடை அடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:57 PM GMT (Updated: 22 Sep 2018 10:57 PM GMT)

மராட்டியம் மற்றும் பல மாநிலங்களில் ஆன்லைனில் உயிர்காக்கும் மருந்துகள் உள்பட பல்வேறு மருந்துகளின் விற்பனை டாக்டர்களின் பரிந்துரை ரசீது இன்றி நடந்து வருகிறது.

மும்பை,

 மராட்டியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருந்து கடை உரிமையாளர்கள் இதனை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அகில இந்திய மருந்து கடை சங்கம் வருகிற 28-ந் தேதி ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் குதிக்க போவதாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மராட்டிய மாநில மருந்து கடை உரிமையாளர் சங்கத்தலைவர் ஹக்கும்ராஜ் மேத்தா தெரிவிக்கையில், டாக்டர்களின் பரிந்துரை ரசீது இல்லாமல் கருத்தடை உள்பட பல ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருவதை கண்டித்து வருகிற 28-ந் தேதி ஒரு நாள் கடைகள் அடைப்பு மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்க ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Next Story