பா.ஜனதாவுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த உறவும் இல்லை - இல.கணேசன் எம்.பி.


பா.ஜனதாவுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த உறவும் இல்லை - இல.கணேசன் எம்.பி.
x
தினத்தந்தி 1 Oct 2018 5:00 AM IST (Updated: 1 Oct 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுக்கும்,, தி.மு.க.வுக்கும் எந்த உறவும் இல்லை என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் பா.ஜனதா கட்சியின் பொற்றாமரை அமைப்பு சார்பில் கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இல.கணேசன் எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் சேர வேண்டுமென தி.மு.க.வினர் கனவிலும் நினைக்க மாட்டார்கள். பா.ஜனதாவுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த உறவும் இல்லை. அனைத்து கட்சியினரிடமும் நாங்கள் பழகி வருகின்றோம்.

பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கத்தை யாரோ ஒரு சிலர் வழக்கு தொடுத்தார்கள் என்பதற்காக அதை மாற்றி தீர்ப்பு வந்து இருக்கலாம். பொதுவாக பக்தர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். அதனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட மக்கள் எதிர்க்காமல் இருக்கலாம். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு எதிராக தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வருகிறது. அதில் வேறு விதமான நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.

தகாத உறவு குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த சமுதாயம் தர்மத்தின் அடிப்படையில் உள்ள சமுதாயம். அதனால் இந்த சமுதாயத்தில் அந்த தீர்ப்பினால் எந்த மாற்றத்தையும் உண்டாக்க முடியாது என்பது என் கருத்து. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து யார் பேசினாலும் பலன் இல்லை. இது குறித்த கவர்னர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறார். மேலும் ஈழத்தமிழர்களுக்காக அதிகம் குரல் கொடுத்து வருவதாக கூறும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்த கேள்விக்கு, அந்த விவகாரம் சட்டரீதியாக அணுகப்பட்டு வருவதாகவும் கட்சிகள் ஒன்றும் கருத்து சொல்ல இடம் இல்லை என்று தெளிவாக கருத்து கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.


1 More update

Next Story