காவலாளியை கட்டிப்போட்டு பஸ் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி கண்டக்டர் உள்பட 3 பேர் கைது
கரூரில் காவலாளியை கட்டிப்போட்டு பஸ் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இதில் கண்டக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கரூர் எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 49). பஸ் அதிபர். கடந்த 1-ந்தேதி நள்ளிரவில் இவரது வீட்டுக்கு மர்ம நபர்கள் 3 பேர் கொள்ளை யடிப்பதற்காக வந்தனர். அப்போது, வீட்டின் நுழைவு வாயிலில் காவலாளியாக வேலை செய்து கொண்டிருந்த, பாலவிடுதி அருகே சிங்கம்பட்டியை சேர்ந்த பாலு (55) அந்த நபர்களை கண்டதும் விசிலை எடுத்து ஊத தொடங்கினார். இதைக்கண்ட அந்த நபர்கள் சுதாரித்துக்கொண்டு பாலுவை வளைத்து பிடித்து கயிற்றால் கட்டி போட்டனர். பின்னர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டனர். இதையடுத்து அந்த நபர்கள் மெதுவாக பிரகாஷின் வீட்டு கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது வீட்டினுள் ஆட்கள் படுத்து தூங்குவதை கண்டதும் அந்த நபர்கள், தாங்கள் மாட்டி கொள்வோமோ? என்கிற அச்சத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு அங் கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே காலை விடிந்ததும், காவலாளி கட்டி போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் காவலாளியின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று கரூர் லைட்அவுஸ் கார்னர் பகுதியில் கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். பின்னர் அவர்களிடம் துருவி, துருவி விசாரித்த போது அவர்கள், குளித்தலை தாலுகா கல்லடை பகுதியை சேர்ந்த சக்திமான் (21), ரெங்கதுரை (20) மற்றும் கள்ளிப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (20) என்பது தெரிய வந்தது.
இதில் சக்திமான், பிரகாஷின் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்ததும் சில காரணங்களால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் அதிக பணத் தேவையை காரணம் காட்டி சக்திமான் உள்பட 3 பேரும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story