கோவில்களை முறையாக பராமரிக்காததால் சாமி சிலைகள் திருட்டு போகின்றன எச்.ராஜா பேட்டி


கோவில்களை முறையாக பராமரிக்காததால் சாமி சிலைகள் திருட்டு போகின்றன எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2018 4:30 AM IST (Updated: 5 Oct 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை முறையாக பராமரிக்காததால் சாமி சிலைகள் திருட்டு போகின்றன என்று திருச்சியில் எச்.ராஜா கூறினார்.

திருச்சி,

இந்த கோவிலை சுற்றி அதிகமான கடைகள் உள்ளன. இது தவிர, இந்த கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தான் இந்த கோவிலில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. தமிழக கோவில்களின் சொத்து பட்டியலை எந்த அதிகாரியும் முறையாக வைத்து இருக்கவில்லை. ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து வழிபாடு இல்லாமல் இருக்கிறது. தமிழகம் முழுவதும் கொள்ளை போன சாமி சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிறப்பாக நடவடிக்கை எடுத்து மீட்டு வருகிறார். சிலைகளை மறைத்து வைத்து இருப்பவர்கள் 15 நாட்களுக்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படிஇல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

கோவில்களை பராமரிப்பு செய்யாமல் சிதிலமடைய செய்ததே சிலைகள் திருட்டு போனதற்கு காரணம். பல கோவில்களில் வைர நகைகளுக்கும், தங்க அங்கிகளுக்கும் பராமரிப்பு கணக்கு இல்லை. இந்து மதத்தை காக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே இந்து மதத்தை அழித்துவிடும் என்கிற நிலை நிலவுகிறது. அரசு வேண்டுமானால் மதம் சார்பற்றதாக இருக்கலாம். இந்து அறநிலையத்துறை என்பது மதம் சார்ந்தது. எனவே இந்து கோவில்களை முறையாக பராமரிக்க வேண்டும். இந்து சமயஅறநிலையத்துறையில் மாற்று மதத்தினரை பணியில் அமர்த்தக்கூடாது. இந்து கோவில்கள் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story