புயல் எச்சரிக்கை எதிரொலி: தேங்காப்பட்டணம் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர்
புயல் எச்சரிக்கை எதிரொலியால் தேங்காப்பட்டணம் மீனவர்கள் அச்சத்துடன் கரைதிரும்பினர்.
கருங்கல்,
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகளில் தேங்காப்பட்டணம், குரும்பனை, மிடாலம், மேல் மிடாலம், ஹெலன்நகர், இனையம், இனையம்புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை, இரையுமன்துறை, உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்கள் 3 முதல் 15 நாட்கள் வரை கேரள கடல் பகுதி மற்றும் லட்சத்தீவின் ஆழ்கடல் பகுதிகளில் தங்கியிருந்து மீன்களை பிடித்து வருவது வழக்கம்.
இந்தநிலையில் அரபிக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்த எச்சரிக்கை தகவல் குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் தெரிவித்தனர்.
மேலும், மீனவ கிராமத்தில் உள்ள ஆலயத்தின் மூலம் அவ்வப்போது மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்த தகவலை அறிந்து தேங்காப்பட்டணம் மீனவர்கள் நேற்று காலை அச்சத்துடன் கரைக்கு திரும்பினர். பாதியில் திரும்பியதால் குறைந்த அளவு மீன்களுடன் மீனவர்கள் வந்தனர். அவ்வாறு கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு வீசிய ஒகி புயலில் சிக்கி ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் பலியாகி உள்ளனர். மேலும், ஏராளமான விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்கத்தில் இருந்து நாங்கள் மீள முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் புயல் சின்னம் உருவாகி உள்ள தகவலை ஆழ்கடல் பகுதியில் இருந்த எங்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
மேலும், கடல் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றும், மழையும் பெய்து வந்ததால் அவசரமாக கரை திரும்பினோம். இதேபோல் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்று இரவுக்குள் கரைக்கு வந்து விடுவார்கள் என்று கூறினர். இதேபோல் நேற்று முன்தினம் கரை திரும்பிய குளச்சல் விசைப்படகு மீனவர்களும் அச்சத்துடனே அவசரமாக கரை திரும்பியதாக கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story