டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்
நாகையில், டீசல் விலை உயர்வை கண்டித்து 4-வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்,
இலங்கை கடற் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 4-வது நாளாக மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. நேற்று முன்தினம் மீனவர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கறைகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாகை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story