திருமணமான 9 மாதத்தில் தஞ்சையை சேர்ந்த பெண் தலை துண்டித்து கொலை கணவர் கைது
திருச்சி அருகே திருமணமான 9 மாதத்தில் தஞ்சையை சேர்ந்த பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி காட்டூர் பிலோமினாள்புரத்தை சேர்ந்தவர் தனிஷ்லாஷ்(வயது 60). இவரது மனைவி சகாயமேரி. இந்த தம்பதியருக்கு 2 மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் சங்கர் சகாயராஜ்(30). எல்.ஐ.சி. முகவர். இளைய மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். மகள் ஆரோக்கிய சுபு(25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். சங்கர் சகாயராஜிக்கும், தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பந்துருத்தியை சேர்ந்த பெஞ்சமின் மகள் ஜெசிந்தா ஜோஸ்பினுக்கும்(26) கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணத்தின் போது ஜெசிந்தா ஜோஸ்பினுக்கு 7 பவுன் நகை போடப்பட்டது. அதில் 2½ பவுன் நெக்லசை கழற்றி பீரோவில் வைத்திருந்தார். அதை, சங்கர் சகாயராஜ் மனைவிக்கு தெரியாமல் எடுத்துச்சென்று அடகு வைத்து விட்டார். இது தெரியவந்ததும் ஜெசிந்தா ஜோஸ்பின் கணவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற ஜெசிந்தா ஜோஸ்பின், அதன்பிறகு கணவர் வீட்டுக்கு வரவில்லை. சங்கர் சகாயராஜ் 3 முறை மாமனார் வீட்டுக்கு சென்று, குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும், ஜெசிந்தா ஜோஸ்பின் வர மறுத்து விட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் சங்கர் சகாயராஜின் பெற்றோர், ஜெசிந்தா ஜோஸ்பின் வீட்டுக்கு சென்று அவர்களிடம் சமாதானம் பேசியதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜெசிந்தா ஜோஸ்பின் கணவருடன் வாழ சம்மதித்தார். இதையடுத்து மருமகளை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் கணவர் வீட்டுக்கு வந்த பிறகும் சங்கர் சகாயராஜ்-ஜெசிந்தா ஜோஸ்பின் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் கீழ்தளத்தில் உள்ள தங்களது அறைக்கு தூங்க சென்றனர். தனிஷ்லாஷ், சகாயமேரி, அவர்களது மகள் ஆரோக்கியசுபு ஆகியோர் முதல் மாடியில் தூங்கினர்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு தேவாலயத்துக்கு செல்வதற்காக சகாயமேரி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து, கதவை தட்டி மகனை எழுப்பினார். அப்போது வெளியே வந்த சங்கர் சகாயராஜின் ஆடையில் ரத்தக்கறை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சகாயமேரி அறைக்குள் சென்று பார்த்த போது, அங்கு படுக்கை அறையில் ஜெசிந்தா ஜோஸ்பின் தலை துண்டித்து பிணமாக கிடந்தார். படுக்கை முழுவதும் ரத்தத்தால் நனைந்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சகாயமேரி கூச்சல் போட்டார். உடனே மாடியில் இருந்து கணவரும், மகளும் ஓடிவந்து ஜெசிந்தா ஜோஸ்பின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர்களது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொலை நடந்த வீட்டு முன் திரண்டனர்.
இதற்கிடையில் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் சங்கர் சகாயராஜ் வீட்டில் இருந்து வெளியேறி கிராம நிர்வாக அதிகாரி சிவலிங்கம் முன்னிலையில் சரணடைந்தார். அவர் திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போலீசார் சங்கர் சகாயராஜை கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஜெசிந்தா ஜோஸ்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story