பீட் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி


பீட் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2018 4:43 AM IST (Updated: 8 Oct 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

பீட்,

பீட் மாவட்டத்தில், கேஜ் தாலுகா யூசுப் வதேகாவ் பகுதியை சேர்ந்த குருராஜ் ரங்கநாத்(வயது65) உள்பட 2 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

இதே மாவட்டத்தை சேர்ந்த மேலும் பலர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட சிவில் மருத்துவ டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

மேலும் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்காக நாங்கள் சிறப்பு தனி வார்டை ஒதுக்கியுள்ளோம். தேவையான மருந்துகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story