மாவட்ட செய்திகள்

பட்டா மாற்றம் செய்ய ரூ.600 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை + "||" + 2 years imprisonment for retired Rural Officer who purchased a bribe of Rs

பட்டா மாற்றம் செய்ய ரூ.600 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

பட்டா மாற்றம் செய்ய ரூ.600 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
பட்டா மாற்றம் செய்ய ரூ.600 லஞ்சம் வாங்கிய ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவரது மகன் முகமது சலீம். இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலப்பட்டாவை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கடந்த 2008–ம் ஆண்டு பாடாலூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மணியை அணுகினார். இதற்காக தனக்கு ரூ.600 லஞ்சம் தருமாறு, முகமது சலீமிடம் மணி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அவர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

2 ஆண்டுகள் சிறை

இதையடுத்து கடந்த 30.4.2008 அன்று கிராம நிர்வாக அதிகாரி மணியிடம், ரசாயன தடவிய ரூ.600–ஐ முகமது சலீம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் மணி மீது பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் மணி பணி ஓய்வு பெற்றார். இதனிடையே இந்த வழக்கை தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி முரளிதரன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. அரசு நிலம் ஆக்கிரமிப்பு; லஞ்சம் பெற்று பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
2. லஞ்சம் விவகாரம் “மத்திய அமைச்சருக்கு சில கோடி வழங்கப்பட்டது!” சிபிஐ அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
சிபிஐ லஞ்சம் விவகாரத்தில் “மத்திய அமைச்சருக்கு சில கோடி வழங்கப்பட்டது” என சிபிஐ அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
3. மானியம் வழங்குவதற்காக டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
புதிய மினிலாரி வாங்க மானியம் வழங்குவதற்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
4. 56 சதவீத இந்தியர்கள் லஞ்சம் கொடுப்பதுதான் வேலை நடக்க ஒரே வழி என ஒப்புகொண்டுள்ளனர்
56 சதவீத இந்தியர்கள் லஞ்சம் கொடுப்பதுதான் வேலை நடக்க ஒரே வழி என்று ஒப்புக்கொண்டு உள்ளனர். இது புதிய சர்வேயில் தெரியவந்துள்ளது.
5. உளுந்தூர்பேட்டை அருகே : விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-