பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:30 AM IST (Updated: 17 Oct 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க தலைவர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவனருட்செல்வன், துணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராமலிங்கம், சி.ஐ.டி.யூ. நகர தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொது பணியிடம் மாறுதல் வழங்க வேண்டும். தற்போது வழங்கி வரும் பயணப்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மின்சார கட்டணத்தை முழுமையாக வழங்க வேண்டும்.

அனைத்து கடைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கிடங்குகளில் இருந்து வரும் மதுபான பெட்டிகளை கடைகளில் இறக்கி வைப்பதற்கு கூலியாக பெட்டிக்கு ரூ.5 வரை கட்டாய வசூல் செய்யும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கூட்டுறவு சங்க தலைவர் மணி, திருமருகல் சி.ஐ.டி.யூ. ஒன்றிய செயலாளர் லெனின், மாவட்ட செயலாளர் சீனிமணி மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story