மாமல்லபுரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சென்னை ஆட்டோ டிரைவர்; நண்பர் கைது
சூளேரிக்காட்டில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அருகே 14–ந்தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காட்டில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அருகே 14–ந்தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சென்னை பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வடிவேல் (வயது 40) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கொலை செய்தது யார்? என போலீசார் விசாரித்தனர்.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொலை நடந்த அன்று ஒரு ஆட்டோ அங்கு வந்து சென்றுள்ளது. அதில் வடிவேலுடன் வந்தவர் பல்லாவரத்தை சேர்ந்த அவருடைய நண்பர் ராஜூ என தெரியவந்தது.
இதையடுத்து ராஜூவை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தன்னுடைய ஆட்டோவை ஓட்டி வந்த வடிவேல் தனக்கு ஆட்டோ வாடகை பணத்தை தராததால் மது வாங்கி கொடுத்து அவரது முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக போலீசாரிடம் ராஜூ தெரிவித்தார். இதையடுத்து ராஜூவை போலீசார் கைது செய்தனர்.