தடையை மீறி சென்ற 2 பேருக்கு அபராதம்: வெள்ளியங்கிரி மலையில் என்ஜினீயர் பலியானது எப்படி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்
தடையை மீறி வெள்ளியங்கிரி மலைக்கு சென்றதால் 2 பேருக்கு அபராதம் விதித்ததுடன், அந்த மலையில் என்ஜினீயர் பலியானது எப்படி? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை,
தொண்டாமுத்தூர் அருகே பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென்கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
மேலும் இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள 7-வது மலைக்கு சென்று அங்கு இருக்கும் சுயம்புலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்புவது வழக்கம்.
பக்தர்கள் நடந்து செல்லும் பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கு திடீரென்று காலநிலை மாற்றம் ஏற்படும் என்பதால், மலை மீது செல்ல ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கோவிலில் இருந்து மலைக்கு செல்லும் பகுதியில் உள்ள கேட் மூடப்பட்டு, மலை மீது செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பும் அதில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த என்ஜினீயர் நேதாஜி (வயது 39) மற்றும் அவருடைய நண்பர்கள் கவுதம், பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் காலையில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 7 மலைக்கு சென்றுவிட்டு திரும்பினார்கள். 4-வது மலைக்கு அவர்கள் வந்தபோது திடீரென்று நேதாஜிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் உடன் சென்றவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற நேதாஜி இறந்தது எப்படி? என்பது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி மலைக்கு சென்றவர்கள் கோவிலில் இருந்து செல்லும் வழியாக போகவில்லை. மாற்று வழியில்தான் சென்று உள்ளனர். பொதுவாக ஜூன் மாதத்துக்கு பிறகு கேரளாவில் பருவமழை தொடங்கும் என்பதால் இந்த மலையில் திடீரென்று காலநிலை மாற்றம் ஏற்படும்.
இந்த மலையின் மொத்த உயரம் 6 ஆயிரத்து 100 அடி ஆகும். 3-வது மலையை தாண்டி சென்றாலே எந்த நேரத்திலும் காலநிலையில் மாற்றம் ஏற்படும். 4-வது மலையில் இருந்து 7-வது மலை வரை மேக மூட்டம் நிறைந்துதான் இருக்கும். அதனுள் செல்லும்போது 10 அடி முன்னால் இருப்பது என்னவென்றே தெரியாது.
அத்துடன் திடீரென்று மழை பெய்யும்போது கடுங்குளிர் ஏற்படும். அந்த குளிரை நம்மால் தாங்கவே முடியாது. அங்கு சென்றுவிட்டு திரும்புவது மிகக்கடினம். அத்துடன் கடுமையான காற்றும் வீசும். அந்த காற்றில் அழுகிய நாற்றம் இருக்கும் என்பதால் நம்மால் சுவாசிக்க முடியாது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு விடும்.
இந்த மாற்றம் எப்போது நடக்கும் என்றே தெரியாது. திடீரென்று நன்றாக இருக்கும். அடுத்த சில நிமிடங்களிலேயே காலநிலை மாற்றம் ஏற்பட்டு விடும். அப்போது வெப்பநிலை மிகவும் குறைந்துவிடும். இதன் காரணமாக 4-வது மலைக்கு மேல் பகுதியில் வனவிலங்குகள் கூட இருக்காது. அத்துடன் இந்த மலை மற்ற மலையை போன்று சாதாரணமாக இருக்காது.
அப்படிப்பட்ட காலநிலை மாற்றத்தில்தான் நேதாஜி சிக்கி உள்ளார். இதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் உயிரிழந்து விட்டார். அவர்கள் மலை மீது சென்றது யாருக்குமே தெரியாது. அத்துடன் 3-வது மலைக்கு மேல் செல்போன் சிக்னலும் கிடைக்காது. எனவே அவருடன் சென்றவர்கள் கீழே இறங்கிய பின்னர் எங்களுக்கு தகவல் தெரிவித் தனர்.
அதன்பேரில் நாங்கள் காலநிலை மாற்றத்தை சமாளிக்கக்கூடிய பிரத்யேக ஆடைகளை அணிந்தபடி அங்கு சென்று நேதாஜியின் உடலை மீட்டோம். இங்கு நடக்கும் மாற்றங்கள் குறித்து பக்தர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே அவர்கள் யாரும் அங்கு செல்வது கிடையாது.
ஆனால் மலைக்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை பார்த்துவிட்டு திரும்பி வர வேண்டும் என்று நினைத்து அங்கு செல்பவர்கள்தான் சிக்கிக்கொள்கிறார்கள். எனவே இதுபோன்று தடையை மீறி செல்பவர்களை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அத்துடன் அனுமதியை மீறி சென்றதால் நேதாஜியின் நண்பர்களான கவுதம், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே தடை விதிக்கப்பட்ட நேரத்தில் வெள்ளியங்கிரி மலைக்கு யாரும் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story