அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பன்றிக்காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் - கலெக்டர் ரோகிணி தகவல்
சேலம் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பன்றிக்காய்ச்சலுக்கு தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கலெக்டர் ரோகிணி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பன்றிக்காய்ச்சல் வைரஸ் மூலம் ஏற்படும் தொற்று நோய் ஆகும். அதிக காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, தொண்டைவலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும். கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, மாவட்டம் முழுவதும் 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு இந்த நோயின் தாக்கம் அதிகம் இருக்கும். மேலும், பருவமழைகால தொற்று நோய்களான டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் ரகுநந்தனன், மாநில தொற்றுநோய் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் துரைராஜ், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், நலப்பணிகள் இணை இயக்குனர் சத்யா, துணை இயக்குனர்கள் பூங்கொடி, குமுதா, மாநகர நகர் நல அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story