தஞ்சைக்கு இன்று வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டறிக்கை
தஞ்சைக்கு இன்று (வியாழக்கிழமை) வருகை தரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூறி உள்ளனர்.
தஞ்சாவூர்,
இது தொடர்பாக தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவராக பதவி ஏற்றபின்பு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) தஞ்சை வருகிறார்.
அவர் தஞ்சையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகளின் இல்ல திருமண விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் 3 மணிக்கு தஞ்சை வரும் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
எனவே தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மகளிர் அணியினர், தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story