கூடலூரில் பலத்த மழை: விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின
கூடலூரில் பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் சாரல் மழை பெய்து வந்தது. மேலும் அவ்வப்போது வெயில் அடித்து வந்தது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக போதிய வெளிச்சம் இன்றி தேயிலை மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மழை மற்றும் வெயில் என இருவேறு காலநிலைகள் நிலவுகிறது. இதனால் தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. மேலும் மலைக்காய்கறிகள் விளைச்சலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டதால், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையொட்டி தற்போது கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றிமூற்றி, பாலம்வயல் உள்பட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story