அரக்கோணத்தில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
அரக்கோணத்தில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம்,
அரக்கோணத்தில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால், அதனை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் நகரில் உள்ள 36 வார்டுகளிலும் நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்து கொண்டே செல்கிறது. டவுன் ஹால் தெருக்கள், நேருஜி நகர், ராஜாஜி தெரு, முருகப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஏராளமான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருக்கும் காய்கறி, பழங்களை எடுத்து சென்று விடுகிறது.
மேலும் சமைத்து வைத்து இருக்கும் சாப்பாட்டையும் கீழே தள்ளிவிட்டு சென்று விடுகிறது. வீட்டின் மாடிகளில் வைக்கப்பட்டு இருக்கும் பூச்செடிகளின் தொட்டிகளையும் கீழே தள்ளி உடைத்து விடுகிறது.
அதுமட்டும் இல்லாமல் பொதுமக்கள் கைகளில் கொண்டு செல்லும் பொருட்களையும் பிடுங்கி சென்று விடுகிறது. ரெயில் நிலையம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும் காய்கறிகள், பழங்களை குரங்குகள் அள்ளி சென்று விடுகிறது.
அரக்கோணம் நகரில் திடீரென குரங்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுவதால் காட்டில் இருந்து தானாக வந்த குரங்குகளா? அல்லது கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிகிலபாடி கிராமத்தில் மர்ம நபர்கள் வேன்களில் கொண்டுவந்து குரங்குகளை இறக்கிவிட்டது போல் அரக்கோணம் பகுதியிலும் யாராவது இறக்கிவிட்டு சென்றார்களா? என விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அரக்கோணம் நகரில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

Related Tags :
Next Story