தமிழகத்தில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்புகள் அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகத்தில் இந்த ஆண்டு இலவச மின்திட்டத்தில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் சாலை வசதி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள், அங்கன்வாடி மையம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர். விழாவுக்கு கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலை வகித்தார். இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
தமிழக மின்சார வாரியத்தில் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு 380 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தோம். நிச்சயமாக அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும். பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பின்படி அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 385 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஆண்டுதோறும் 10 ஆயிரம் இணைப்புகள் தட்கல் முறையில் 10 ஆயிரம் இணைப்புகள் சாதாரண முன்னுரிமை முறையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்இணைப்புகள் இந்த ஆண்டில் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நீர்மின் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கொல்லிமலை நீர்மின்திட்டம் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறுகிறார்களே என்று கேட்டதற்கு இந்த விஷயத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்த்து கொள்வார் என்றார்.

Related Tags :
Next Story