இலங்கை கடற்படையால் மண்டபம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு


இலங்கை கடற்படையால் மண்டபம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 11:15 PM GMT (Updated: 30 Oct 2018 11:07 PM GMT)

இலங்கை கடற்படையால் மண்டபம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் ஒரு விசைப்படகில் மண்டபம் காந்தி நகரை சேர்ந்த ஜெயசீலன் (வயது 51), அகஸ்தியர் கூட்டத்தை சேர்ந்த முத்துக்குமார், ராமநாதபுரத்தை சேர்ந்த பழனிக்குமார், உச்சிப்புளி மரவெட்டி வலசையை சேர்ந்த ராமராஜன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மண்டபம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

மேலும் அந்த படகையும், அதில் இருந்த மீனவர்கள் 4 பேரையும் சிறைபிடித்து இலங்கை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மண்டபம் மீனவர்கள் 4 பேரும் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் நேற்று முன்தினம் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாளில் 17 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளது.


Next Story