நொய்யல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்து பறிமுதல் கல்குவாரி உரிமையாளர் கைது
நொய்யல் அருகே வீட்டில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த கல்குவாரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம் நொய்யல் புன்னம்சத்திரம் அருகே பெரிய ரங்கபாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 42). கல்குவாரி உரிமையாளர். இவரது வீட்டில், உரிய அனுமதியின்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வீட்டின் அறையில் சோதனையிட்ட போது, அங்கு கல்குவாரிகளில் பெரிய அளவிலான பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் (வெடிமருந்து) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவற்றை வெடிக்க வைப்பதற்கான திரியும் அங்கு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கணக்கிட்ட போது, 283 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 685 மீட்டர் நீளமுள்ள திரி இருந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், க.பரமத்தி வருவாய் ஆய்வாளர் கணேசன், கிராம நிர்வாக அதிகாரி நல்லுசாமி உள்பட வருவாய்த்துறையினர் அங்கு வந்து தர்மலிங்கம் வீட்டை பார்வையிட்டு, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட வெடி மருந்துகள் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா?, எங்கிருந்து அவை வாங்கி வரப்பட்டன? என்பன குறித்து விசாரித்தனர்.
மேலும் இதுதொடர்பாக தர்மலிங்கத்திடம் அவர்கள் உரிய விளக்கம் கேட்டனர். இச்சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்தார். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெடிமருந்து பொருட்களை உரிய அனுமதி பெற்று பாதுகாப்பான இடத்தில் வைத்து தான் விற்பனை செய்ய வேண்டும். அதன் அருகே குடியிருப்புகள் ஏதும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஜெலட்டின் குச்சிகளில் தீ விபத்து ஏதும் ஏற்பட்டால் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கரூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story