கன்று குட்டிகளுடன் 3 பசு மாடுகள் திருட்டு; போலீசார் விசாரணை


கன்று குட்டிகளுடன் 3 பசு மாடுகள் திருட்டு; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Nov 2018 3:45 AM IST (Updated: 6 Nov 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கன்று குட்டிகளுடன் 3 பசு மாடுகள் திருட்டு; போலீசார் விசாரணை.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மார்கண்டேயன் (வயது 48), ராதிகா (30), காசாம்பு (50). இவர்கள் 3 பேரும் ஊருக்கு அருகாமையில் உள்ள வயலில் பட்டிகள் அமைத்து பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு காசாம்புவுக்கு சொந்தமான ஒரு பசுமாடு, ஒரு கன்று குட்டியையும், ராதிகாவுக்கு ஒரு பசுமாடும், மார்கண்டேயனுக்கு சொந்தமான ஒரு பசுமாடு மற்றும் ஒரு கன்று குட்டிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது பசுமாடு, கன்று குட்டிகள் காணாமல் போயிருப்பதை தெரியவந்தது. இதுகுறித்து 3 பேரும் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story