வருகிற 20, 27-ந்தேதிகளில் கரூர் மார்க்க ரெயில் சேவையில் மாற்றம்


வருகிற 20, 27-ந்தேதிகளில் கரூர் மார்க்க ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 9:35 PM GMT)

கரூர் மார்க்க ரெயில் சேவையில் வருகிற 20, 27-ந் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர்-ஈரோடு இடையே ரெயில்வே பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி கரூர் மார்க்கத்தில் வருகிற 20, 27-ந்தேதிகளில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 20, 27-ந்தேதிகளில் கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில் (வ.எண் 56320), பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் (வ.எண் 56712) ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும். 20-ந்தேதி ஈரோடு-நெல்லை பயணிகள் ரெயில் (வ.எண் 56825) ஈரோடு-கரூர் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அன்றைய தினம் நெல்லை-ஈரோடு பயணிகள் ரெயில் (வ.எண் 56826) கரூர் ரெயில் நிலையத்திற்கு 35 நிமிடம் தாமதமாக வரும். 20, 27-ந்தேதிகளில் திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (வ.எண் 56841) கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர்-ஈரோடு இடையே சேவை கிடையாது.

இதேபோல் 27-ந்தேதி நெல்லை-ஈரோடு-நெல்லை பயணிகள் ரெயில் கரூர்-ஈரோடு இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண் 16340) கரூர்-புகளூர் இடையே 50 நிமிடம் தாமதமாகும். திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயில் (வ.எண் 56713) கரூர் ரெயில் நிலையத்திற்கு 20 நிமிடம் தாமதமாக சென்றடையும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story