இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு எதிராக அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் வைகோ பேட்டி


இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு எதிராக அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 9:40 PM GMT)

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு எதிராக அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

செம்பட்டு,

மத்திய அரசை தேர்தலில் தோல்வியடைய செய்ய காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை இணைக்கும் சந்திரபாபு நாயுடு, சரத்பவார், பரூக் அப்துல்லா போன்றோரின் முயற்சி வெற்றி பெறும். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைக்கப்படும் அரசு கூட்டணி ஆட்சியுடன் கூடிய கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமையும் என நம்புகிறேன்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் நடவடிக்கை தமிழர்களின் பண்பாட்டை அழிக்கும் முயற்சி. இதற்கு முன்பு நடந்தது ரத்தம் தோய்ந்த இனப்படுகொலை என்றால், இனி நடக்கவிருப்பது தமிழர்களின் பண்பாட்டை அழிக்கும் படுகொலையாக இருக்கும். இதற்கு எதிராக அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு கண் இருந்தும் குருடர்களாய், வாய் இருந்தும் மவுனிகளாக இருக்கிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் நாடக மாடுகிறார். அமைச்சரவை தீர்மானத்தை அவர் செயல் படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story