கமுதி, அபிராமம் பகுதிகளில் தொடர் மணல் திருட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
கமுதி, அபிராமம் பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கமுதி,
கமுதி, அபிராமம், பேரையூர் பகுதியை சுற்றி குண்டாறு, பரளையாறு, மலட்டாறு, கிருதுமால் நதி போன்ற ஆற்றுப்படுகைகளில் இரவு பகலாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதுதவிர அரசுக்கு சொந்தமான இடங்கள், விவசாய நிலங்கள், பட்டா இடங்கள் போன்றவற்றிலும் டிப்பர் லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.
அதிகப்படியான மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
பல இடங்களில் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே உடனடியாக மணல் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் மனு அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story