கனிமொழி எம்.பி. இன்று குமரி வருகை: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு


கனிமொழி எம்.பி. இன்று குமரி வருகை: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 17 Nov 2018 4:45 AM IST (Updated: 17 Nov 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

கனிமொழி எம்.பி. இன்று (சனிக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

நாகர்கோவில்,

தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று (சனிக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் வருகிறார். இதையொட்டி அவருக்கு ஆரல்வாய்மொழியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் அவர், அங்கிருந்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் தங்குகிறார். அதன் பிறகு அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் செயல்படுத்தப்பட்ட ரூ.1 கோடியே 4 லட்சத்திலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து கருங்கல் சந்தை திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் கனிமொழி எம்.பி. மீண்டும் கார் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.

எனவே ஆரல்வாய்மொழியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story