பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது கனிமொழி எம்.பி. பேச்சு


பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 19 Nov 2018 4:45 AM IST (Updated: 18 Nov 2018 8:29 PM IST)
t-max-icont-min-icon

பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது என்று தி.மு.க. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

கருங்கல்,

கருங்கல் சந்தை திடலில் தி.மு.க. அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். மாநில மீனவரணி செயலாளர் பெர்னார்டு உள்பட பலர் பேசினர். சிறப்பு விருந்தினராக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தி.மு.க. ஆட்சியில் நம்ம வீட்டு பிள்ளைகள் படிப்பதற்காக தமிழ் நாட்டில் அதிகமான மருத்துவக் கல்லூரிகளை கலைஞர் கருணாநிதி திறந்தார். மற்ற மாநிலங்களில் அதிகப்படியான மருத்துவக் கல்லூரிகள் கிடையாது. இங்குள்ள கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு டெல்லிக்கு தாரை வார்த்தது. தற்போது நம் பிள்ளைகள் படிக்கவேண்டிய கல்லூரிகள் பிற மாநிலத்தவர்களுக்காக திறந்து விடப்படுகிறது.

மத்திய அரசு நமக்கு தேவையானதை செய்வதில்லை. தேவையற்ற மீத்தேன் திட்டம் போன்றவற்றை திணித்து கொண்டிருக்கிறது.

குட்கா விவகாரத்தில் குற்றவாளி யார் என்று தெரிந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நடந்தால் குலுங்குகிறது. குலுங்கும் அளவிற்கு கட்டி தந்துள்ளார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் வரவேண்டும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். பா.ஜனதா பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தது.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story