திருச்சி விமான நிலையத்தில் அரியலூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் அரியலூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
திருச்சியில் இருந்து மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு தினமும் தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல ஒரு விமானம் தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் ஏறுவதற்காக வந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர்.
வெளிநாட்டு பணம் பறிமுதல்
இதில் அந்த பெண்ணின் பெயர் ரஷியாபானு (வயது36), அரியலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பைகளை அதிகாரிகள் சோதனை போட்டபோது ரூ.5 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள மலேசியன் ரிங்கிட் மற்றும் அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story