கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையில் கட்டப்பட்ட ஓட்டல் கட்டிடத்தை இடிக்க கோர்ட்டு உத்தரவு


கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையில் கட்டப்பட்ட ஓட்டல் கட்டிடத்தை இடிக்க கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Nov 2018 10:15 PM GMT (Updated: 20 Nov 2018 9:08 PM GMT)

கும்பகோணத்தில் கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையில் கட்டப்பட்ட ஓட்டல் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம்,

கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ளது வியாழசோமேஸ்வரர் கோவில். இந்த கோவிலின் ராஜகோபுரம் உள்ள பகுதிக்கு முன்பு ராஜேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஓட்டலையும், தங்கும் விடுதியையும் கட்டினார். இந்த ஓட்டல் கட்டிடம் கோவில் கோபுரத்தை மறைப்பதாக புகார்கள் எழுந்தது.

இதைத்தொடர்ந்து ராஜகோபுரத்தை மறைக்கும் வகையிலும் உள்ளூர் திட்ட குழும விதிகளுக்கு முரணாகவும், கோவிலின் மதில்சுவரை பாதிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இடிக்க வேண்டும் என கூறி கோவில் நிர்வாகம் சார்பில் கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கும்பகோணம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, கும்பகோணம் நகரில் விதிகளுக்கு முரணாக 9 மீட்டருக்கு மேல் கட்டப்பட்டுள்ள ஓட்டல் கட்டிட பகுதியை கட்டியவர்களே 2 மாதங்களுக்குள் இடிக்க வேண்டும். தவறினால் 2 மாதங்கள் கழித்து அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும் என உத்தரவிட்டார்.

Next Story