பெண் கழுத்தை அறுத்துக் கொலை; தொழிலாளி கைது


பெண் கழுத்தை அறுத்துக் கொலை; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 Nov 2018 4:00 AM IST (Updated: 22 Nov 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண்னை கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள பேய்க்குளம் கிராமத்தில் உள்ள மக்காச்சோள காட்டில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கள்ளிக்குடி போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மக்காச்சோள காட்டில் இறந்து கிடந்த பெண் பேய்க்குளம் கிராமத்தை சேர்ந்த முருகனின் மனைவி ஜோதி(வயது 35) என்பது தெரிந்தது. இவர் விவசாய கூலியாக வேலை செய்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் பெரியசாமி(55), தொழிலாளி. இவர் ஜோதியிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சோள காட்டிற்கு புல் அறுக்க அவர் சென்றுள்ளார். பின் தொடர்ந்து சென்ற பெரியசாமி ஜோதியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது ஜோதி அவரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து பெரியசாமி அரிவாளால் ஜோதியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்த தப்பியோடியது தெரியவந்தது.

இதனையடுத்து கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை தேடி வந்தனர். அப்போது அவர் அதே பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வீட்டினுள் பதுங்கியிருந்த பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.


Next Story