தனியார் வாகன ஷோரூமில் தீ விபத்து


தனியார் வாகன ஷோரூமில் தீ விபத்து
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 22 Nov 2018 6:55 PM GMT)

தனியார் வாகன ஷோரூமில்திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தர்மபுரி, 

தர்மபுரியில் சேலம் மெயின்ரோட்டில் தனியார் இருசக்கர வாகன ஷோரூம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இந்த ஷோரூமில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஷோரூமில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story