கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
மானிய விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் தொகையை ரூ.2 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம்,
சொந்த வீடு இல்லாத ஆட்டோ டிரைவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சொந்த ஆட்டோ இல்லாத டிரைவர்களுக்கு முன்தொகையின்றி மானியத்துடன் ஆட்டோ வழங்க வேண்டும். மானிய விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் தொகையை ரூ.2 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்டோ சங்க ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், பகுதி செயலாளர் வேளாங்கண்ணி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சுந்தரம், மாணிக்கம், முத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுக்களை ஸ்ரீரங்கம் துணை தாசில்தார் தமிழ்செல்வியிடம் வழங்கினர்.

Related Tags :
Next Story