மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல், 29 பேர் கைது


மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல், 29 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2018 5:30 AM IST (Updated: 3 Dec 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட வரைவுக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்புதலை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நேற்று காலை புதுச்சேரி ரெயில் நிலையம் எதிரே உள்ள இருதய ஆண்டவர் கோவில் அருகே ஒன்று கூடினர்.

அங்கிருந்து அவர்கள் ரெயில்நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு கட்சியின் மாநில நிர்வாகி தமிழ் மீரான் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் அமுதன் பாலா, இளங்கோவன், செல்வராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். அங்கு அவர்கள் புதுவையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட தயாராக இருந்த ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 29 பேரை கைது செய்தனர்.


Next Story