அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி


அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 6 Dec 2018 5:00 AM IST (Updated: 6 Dec 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரோடு,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்து நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஜெகதீஷ் தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், முருகுசேகர், ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் சின்னச்சாமி, துணைச்செயலாளர் வீரக்குமார் மற்றும் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் நந்தகோபால், கேபிள் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் ஈரோடு பெரியார் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன் தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் மின்மணி, முன்னாள் கவுன்சிலர் ராதாகோபால், சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

சூரியம்பாளையம் பகுதி அ.தி.மு.க. சார்பில், சூளை பகுதியில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் தொகுதி செயலாளர் எம்.ஜி.பழனிசாமி, வீரப்பன்சத்திரம் கூட்டுறவு வங்கி தலைவர் தாமோதிரன், முன்னாள் மண்டல தலைவர் முனியப்பன், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணராஜ், வட்ட செயலாளர்கள் துரைசாமி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.



Next Story