பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முஸ்லிம் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் கட்சியினர் ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சை ரெயில் நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பைசல் முகமது தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமதுஅலி ஜின்னா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி அமீனாபீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது வரவேற்றார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் முகைதீன் அப்துல்காதர் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பாபர் முசூதி வழக்கை உடனே முடிக்க வேண்டும். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக வழிபாட்டு அமைப்பை அகற்ற வேண்டும். வாக்குறுதியின்படி மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ஹாஜா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story