அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம்


அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:27 PM GMT (Updated: 6 Dec 2018 11:27 PM GMT)

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் அவரது திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பனைக்குளம்,

இதன்படி மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் சண்முகவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தினகரன், மாவட்ட மாணவரணி பொருளாளர் விஜயராமகிருஷ்ணன், நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன், ஒன்றிய மாணவரணி தலைவர் பரமகுரு, துணை செயலாளர் முருகேசன், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் பூமாரி, ஜெயலலிதா பேரவை ராஜேந்திரன், கிளை செயலாளர்கள் மாரியப்பன், ராமநாதன், கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உச்சிப்புளி பகுதியில் மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க. பிரமுகர் ஆர்.வி.விசுவநாதன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

காரிக்கூட்டம் பாத்திமா நகர் பகுதியில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சக்கரக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவரும், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளருமான நூர்முகமது தலைமையில் நடந்தது. இதேபோல தாமரைக்குளத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மானாங்குடி ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் நளவழுதி, பிரப்பன்வலசையில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதிர் முனியசாமி, சாத்தக்கோன்வலசையில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பி.கே.சந்திரன், புதுமடத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், மண்டபம் பகுதியில் ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர் ஆகியோர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுந்திரவள்ளி, சாத்தான்குளத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லானி சீனிக்கட்டி , மண்டபத்தில் நகர் செயலாளர் சீமான் மரைக்காயர் ஆகியோர் தலைமையிலும் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல சாத்தான்குளத்தில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பாலசங்கர் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெருங்குளத்தில் ஊராட்சி கழக செயலாளர் ஜானகிராமன் தலைமையிலும், பனைக்குளத்தில் செயலாளர் அப்துல் முத்தலிபு தலைமையில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேலுச்சாமி, அவை தலைவர் நாகூர் களஞ்சியம், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் மாஸ் சேக் உதுமான், பொருளாளர் ஆசிக்கனி, ஒன்றிய பிரதிநிதி முகமது அனீஸ் உள்பட அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

உச்சிப்புளி ஊராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மண்டபம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் சாத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர்போகியில் ஊராட்சி கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று மண்டபம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் கிளைக்கழகம் சார்பில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஏர்வாடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவருடைய படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏர்வாடி ஊராட்சி கழக செயலாளர் செய்யது அகமது, கிளை செயலாளர் அஜ்முல் ரகுமான், ஏர்வாடி தர்கா கிளை செயலாளர் லெப்பை கனி, பொருளாளர் முருகேசன், செய்யது இப்ராகிம், முருகேசன், சிவராம், அப்துல் கபூர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல சிக்கலில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பால்பாண்டியன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஊராட்சி கழக செயலாளர் வெள்ளையன், ஒன்றிய பிரதிநிதி சவுந்திரபாண்டியன், சிக்கல் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபுத்திரன், பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் சசிகுமார், கிளை செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story