பா.ஜ.க. அரசியல் நாடகம் நடத்துகிறது - சீமான் பேட்டி


பா.ஜ.க. அரசியல் நாடகம் நடத்துகிறது - சீமான் பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2018 5:30 AM IST (Updated: 9 Dec 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. அரசியல் நாடகம் நடத்துகிறது என மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்தார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

“மேகதாது அணை கட்டினால் தஞ்சை படுகை விவசாயிகளின் வாழ்வாதாரம் மோசமாகி விடும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றி பெற வாக்குகளுக்காக பா.ஜ.க. அரசியல் நாடகம் நடத்துகிறது. கர்நாடக அமைச்சர் தமிழக முதல்– அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுவிட்டு, அணை பகுதியை பார்வையிடுவது நியாயமில்லாத ஒன்று. மலைகள், நதிகளை பாதுகாக்க முடியாமல் அழிக்கின்றனர். உருவாக்க முடியாத இதுபோன்ற வளங்களை ஏன் அழிக்கின்றனர். மணல், மலை போன்றவற்றை 3 அடிக்கு எடுக்க அனுமதி வாங்கி விட்டு 30 அடி தோண்டுகின்றனர். 8 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கும் பிரதமருக்கு, புயலால் பாதித்த மக்களை பார்க்கவும், நிதி ஒதுக்கவும் நேரம் கிடைக்கவில்லை.“

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story