புயலால் சேதமடைந்த கண்ண பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


புயலால் சேதமடைந்த கண்ண பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:15 PM GMT (Updated: 9 Dec 2018 9:25 PM GMT)

கஜா புயலால் சேதமடைந்த கண்ணபெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து கிராமத்தில் கண்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் தெற்கு முகமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் கஜா புயலால் கண்ண பெருமாள் கோவிலின் நுழைவு வாயில், முன் மண்டப கூரைகள், சமையல் அறை ஆகியவை முற்றிலும் சேதமடைந்து விட்டது. புயலால் சேதமடைந்த இந்த கட்டிடங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சீரமைக்க வேண்டும்

கஜா புயலினால் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் ஆகியவை சேதமடைந்தன. அதேபோல கோவில்பத்து கிராமத்தில் உள்ள கண்ண பெருமாள் கோவிலின் நுழைவு வாயில், முன் மண்டப கூரைகள், சமையல் அறை ஆகியவையும் சேதமடைந்தன.

கோவில் நுழைவு வாயில் சேதமடைந்துள்ளதால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் இடிபாடுகளை அகற்றி கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story