புளியங்குடியில் தீ விபத்தில் காயம் அடைந்த தலைமை ஆசிரியை சாவு


புளியங்குடியில் தீ விபத்தில் காயம் அடைந்த தலைமை ஆசிரியை சாவு
x
தினத்தந்தி 10 Dec 2018 3:45 AM IST (Updated: 10 Dec 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் தீவிபத்தில் காயம் அடைந்த தலைமை ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

புளியங்குடி, 

நெல்லை மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி சான்றோர் மடத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் கடவுகனி (வயது 50). இவருடைய மனைவி சீதை (47). இவர் வீரசிகாமணியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் உள்ள குப்பைகளை சீதை எரித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த சீதையை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சீதை நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீதை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புளியங்குடியில் தீ விபத்தில் காயம் அடைந்த தலைமை ஆசிரியை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story