எழும்பூர் ரெயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு


எழும்பூர் ரெயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 4:00 AM IST (Updated: 13 Dec 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே நேற்று காலை 2 பைகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்தன.

சென்னை,

இதை அந்த வழியாக வந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் (ஆர்.பி.எப்.) கண்டனர். உடனடியாக அந்த பைகளை சோதனையிட்டனர். அதில் 10 பெரிய பொட்டலங்களில் கஞ்சா இருந்தது.

இதையடுத்து அந்த கஞ்சா பொட்டலங்கள் எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை, மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஒப்படைத்தார். இந்த கஞ்சா பொட்டலங்களில் மதிப்பு ரூ.1½ லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கஞ்சா பொட்டலங்கள் ரெயில் நிலையத்தில் இருந்து எடுத்து செல்லப்பட இருந்ததா? அல்லது ரெயில் நிலையத்துக்கு உள்ளே கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய உள்ளனர்.

Next Story