ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு


ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 19 Dec 2018 3:45 AM IST (Updated: 19 Dec 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி தலைமையில் கட்சியினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் நேற்று மனு கொடுத்தனர்.

ஈரோடு,

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நாம் தமிழர் கட்சி ஜனநாயக ரீதியாக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. மற்ற அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே மனு அளித்து இருந்தும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.


Next Story