செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கிராம மக்கள் போராட்டம் - 8 பேர் மீது வழக்குப்பதிவு


செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கிராம மக்கள் போராட்டம் - 8 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 Dec 2018 11:15 PM GMT (Updated: 2018-12-22T04:22:49+05:30)

கூத்தாநல்லூர் அருகே செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மாரங்குடி ஊராட்சியில் உள்ள தாமரைப்பள்ளம் கிராமத்திற்கு ஏற்கனவே சென்ற மின் பாதையை மாற்றி செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி தலைமையில் கிராம மக்கள், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தனித்துணை கலெக்டர் (நிலம்) பால்துரை, சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்பழகன், கச்சனம் இளம்மின் பொறியாளர் திருஞானம், வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலெக்டரிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு அதிகாரிகள் கூறியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வடபாதி மங்கலம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கோட்டூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story