வேளாங்கண்ணி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது கார் பறிமுதல்
வேளாங்கண்ணி அருகே கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்கும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், கீழையூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் கீழையூர் கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் காரில் இருந்தவர் களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதுரை தாதனேரியை சேர்ந்த லட்சுமணன் மகன் ஆனந்தன் (வயது 30), பாபநாசம் பெருமாள்கண்ணலூர் வடக்கு தெருவை சேர்ந்த கமலசேகர் மகன் சிலம்பரசன் (32) ஆகியோர் என்பதும், காரில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வேளாங் கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தன், சிலம்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 142 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story