மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. வழங்கினார்


மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 22 Dec 2018 9:26 PM GMT)

கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

கொட்டாம்பட்டி,

இதில் கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 180 பேருக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 219 பேருக்கும், சொக்கலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 119 பேருக்கும், கருங்காலக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 70 பேருக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 202 பேருக்கும், சொக்கலிங்கபுரம் பள்ளி மாணவ-மாணவிகள் 119 பேருக்கும், தும்பைபட்டி பள்ளி மாணவ-மாணவிகள் 127 பேருக்கும், மங்களாம்பட்டி பள்ளி மாணவ-மாணவிகள் 113 பேருக்கும், சேக்கிபட்டி பள்ளி மாணவர்கள் 140 பேருக்கும், மேலவலவு பள்ளி மாணவ-மாணவிகள் 90 பேருக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. முன்னதாக நடந்த விழாவிற்கு மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், அ.தி.மு.க. மதுரை புறநகர் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், ஜெ.பேரவை மாவட்ட துணைத்தலைவர் ஜபார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிசெழியன், மேலூர் ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story