காட்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி


காட்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 26 Dec 2018 4:25 AM IST (Updated: 26 Dec 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மோதியதில் மூதாட்டி ஒருவர் பலியானார்.

வேலூர்,

காட்பாடி தாலுகா பி.என்.பாளையம் ரங்கம்பேட்டையை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 62). இவர் ரங்கம்பேட்டை ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார்சைக்கிள், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வடுகன்குட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயலட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து லத்தேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story